விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி! கர்ப்பிணித்தாய்க்கு நேர்ந்த கதி!

தெனியாய – கிரிவெல்தொல வீதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில், முச்சக்கர வண்டி சாரதியும் கர்ப்பிணி தாயும் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். நேற்று முற்பகல் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இவர்கள் தெனியாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரிவெல்தொல பிரதேசத்திலிருந்து தெனியாய நோக்கி வந்த முச்சக்கர வண்டி, கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பம் ஒன்றில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. புதிதாக காப்பர்ட் இட்டு புனரமைக்கப்பட்ட இவ்வீதியால் வாகன சாரதிகள் மிகவும் வேகமாக பயணிப்பதாகவும் போக்குவரத்து போலிசார் தெரிவிக்கின்றனர். … Continue reading விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி! கர்ப்பிணித்தாய்க்கு நேர்ந்த கதி!